நீங்கள் செய்யக்கூடியது என்ன?

English

 • அது அவர்களின் தவறு அல்ல என்று பாதிக்கப்பட்ட நபரிடம் கூறுங்கள். எந்த ஒரு மதிப்பிடலும் இன்றி அவர்களின் நல்வாழ்வைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதை வெளிக்காட்டுங்கள். பின்வரும் புள்ளிகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
  1. நினைவு: ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் உங்கள் நினைவகத்தை பாதிக்கலாம். ஒரு பாதிக்கப்பட்டவர் நிகழ்ந்த சம்பவத்தை தயக்கத்துடன் நினைவுகூறலாம் அல்லது துல்லியமான நினைவுடன் ஆனால் துண்டு துண்டாக நடந்த நிகழ்வை நினைவில் கொண்டு இருக்கலாம்.
  2. உணர்ச்சிகள்: அதிர்ச்சியின் எதிர்வினையாக பாதிக்கப்பட்டவர் எதிர்ப்பாராத உணர்ச்சிகரமான எதிர்வினைகளை அனுபவிக்கலாம். ஒரு சம்பவம் நினைவு கூறும்போது, அவர்கள் உணர்ச்சியில்லாமல் இருக்கலாம் அல்லது தீவிர உணர்ச்சி ஊசலாட்டத்தை அனுபவிக்கலாம்.
  3. உடல்ரீதியான உணர்வு: அந்த அதிர்ச்சி ஒரு பாதிக்கப்பட்ட நபரில் தற்காலிக அசைவற்ற நிலையை ஏற்படுத்த கூடும், அது தீவிர பயத்தைத் தூண்டிவிடும் சூழ்நிலைகளில் உடலை உறைய செய்யும். இதை அனுபவிக்கும் ஒரு பாதிக்கப்பட்டவர்க்கு இதை எதிர்த்துப் போராடுவதோ அல்லது இதில் இருந்து விடுபடுவதோ சாத்தியம் இல்லை. இந்த நேரத்தில், அதிர்ச்சியை அனுபவிக்கும் ஒரு நபரால் தங்கள் தசை மறிவினையை கட்டுப்படுத்த முடியாது.
 • பாதிக்கப்பட்டவர்களு உதவ நடவடிக்கை எடுங்கள்:
  1. குழந்தை பாலியல் வன்முறை பற்றி அறிய நேர்ந்தால், காவல்துறையினரிடம் புகார் செய்யலாம். நடைமுறையில், நீங்கள் சந்தேகப்பட்டாலே காவல்துறையினரிடம் புகார் செய்யலாம். நல்லெண்ணத்துடன் அளிக்கும் புகாருக்காக நீங்கள் உரிமையியல் அல்லது குற்றவியல் பொறுப்புகளுக்கு உட்பட வேண்டியதில்லை.
  2. பாதிக்கப்பட்டவர் , பெரியவராக இருந்தால்; நீங்கள அவருடன் பேசி ,அவரை புகார் அளிக்கச் செய்யுங்கள்.
  3. ஒரு பெண் வீட்டில் கொடுமை படுத்தப்பட்டாலோ அல்லது திருமண உறவில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டாலோ கூட நீங்கள் காவல்துறையினரிடம் புகார் செய்யலாம். இதற்கும், நீங்கள் உரிமையியல் அல்லது குற்றவியல் பொறுப்புகளை ஏற்க நேராது.
  4. பல சமயங்களில், காவல்துறையினர் புகாரை பதிவுசெய்ய முன்வருவது இல்லை. பாதிக்கப்பட்டவரே புகார் செய்ய சென்றாலும் ; காவல்துறையினர் புகாரை பதிவுசெய்ய மறுக்கின்றனர். அது போன்ற சமயங்களில், நீங்கள் Nakshatra போன்ற அரசுசாரா தொண்டு நிறுவன உதவி எண்ணிற்க்கு தொடர்பு கொண்டால், அங்கு இருக்கும் நிபுணர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக நீதி கிடைக்கவும், மருத்துவ உதவிக்கும், மனநல சிகிச்சைக்கும் வழிவகுப்பார்கள்.
  5. கலந்தாய்வு ஆலோசனை பெற: பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டு; மீண்டு வாழ்பவரின் உடல், மன,உளவியல் அளவில் பாதிப்பு இருக்கும். இந்த பாதிப்புகளை கடந்து வருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், சரியான உதவி மற்றும் ஆதரவுடன் எளிதாக எதிர்கொள்ளலாம். எனவே, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டுவர கலந்தாய்வு ஆலோசனை மிக முக்கியமானது. கலந்தாய்வு ஆலாசனையை; தேவைப்படும் காலம் வரை தொடர்ந்து தர வேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுத்துகிறோம். Nakshatra, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்குகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மன சோர்வுடன் இருக்கும் போது நீங்கள் பரிந்துரை செய்யக்கூடிய சில செயல்கள் இங்கே.
 • உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் பாலியல் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருப்பருக்கோ அல்லது அப்படிப்பட்டவரை அறிந்தவருக்கோ ஆதரவாக இருங்கள். உங்கள் அனுபவத்தை நீங்கள் பகிர்ந்து கொள்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு செயல்பட ஊக்கம் தரும். நாங்கள் , பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையை மதிக்கிறோம். நீங்கள், எங்களுக்கு; உங்கள் பெயரை குறிப்பிடாமலே கடிதம் எழுதலாம். அப்படியே நீங்கள், உங்கள் பெயரையோ அல்லது பாதிக்கப்பட்டவரின் பெயரையோ குறிப்பிட்டு இருந்தாலும், அதை , எங்களது சிறிய வலைபதிவு குழுவைத் தவிர யாருக்கும் வெளியிட மாட.டோம்.

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் குழந்தைகளிடம் பொதுவாக காணப்படும் சில அறிகுறிகள் இங்கே. இளம்பருவத்தினரிடம் காணப்படும் குறிப்பிட்ட அறிகுறிகள் இங்கே. வளர்இளம் பருவத்தினர் வெளிப்படுத்தும் குறிப்பிட்ட அறிகுறிகள் இங்கே.

உங்களால் சிலசமயம் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் நடத்துபவரை அடையாளம் காண முடியும். பாலியல் அத்துமீறல் செய்பவர் வெளிப்படுத்த கூடிய அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்ள இங்கே.

பாதிக்கப்படும் பெரியவர்களிடம் சில சமயம் காணப்படும் அறிகுறிகள் பற்றி படிக்க இங்கே.