உங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்களா ?

English

இன்று நாம் என்ன கற்று கொள்ளலாம் ?

 • தொல்லை செய்பவர் : தொல்லை செய்பவர் யாராக வேணுமானாலும் இருக்கலாம் . வாடிக்கையாளர் , சக தொழிலாளி , பெற்றோர் அல்லது பாதுகாவலர் , உறவினர் , ஆசிரியர் அல்லது பேராசிரியர் , மாணவர் அல்லது அந்நியனாகவும் இருக்கலாம் .
 • பாதிக்கப்பட்ட நபர் : பாதிக்கப்பட்ட நபர் துன்புறுத்தலுக்கு ஆளானவராக தான் இருக்கவேண்டும் என்பது இல்லை. அவர் அந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவராக கூட இருக்கலாம்.
 • வேலை சார்ந்த பரிசு கொடுப்பது (பதவி உயர்வு , உயர்வு அல்லது வேறு வேலையை) அல்லது கல்வி சம்மந்தப்பட்ட பரிசு (சிறந்த தரம் , பரிந்துரை கடிதம் , வகுப்பறையில் சாதகமாக நடத்துவது , வேலை கிடைப்பதற்கு உதவுவது , மானியங்கள் அல்லது கூட்டுறவு, ஏதேனும் கல்வி திட்டம் அல்லது கல்வி சம்மந்தப்பட்ட ஏதேனும் செயல்பாட்டில் ) பாலியல் சம்மந்தப்பட்ட ஏதேனும் உதவிக்கோ அல்லது பாலியல் நடத்தைக்கோ கல்யாணம் செய்து கொள்ள வாக்கு கொடுப்பது . இது அத்தனையும் பாலியல் துன்புறுத்தல் தான் .
 • தேவையற்ற பாலியல் கருத்தாக்கம் , அழைப்புதல்கள் , தேவைகள் அல்லது தேவையற்றதும் தேவையில்லாததுமான உடல் தொடர்பு – உதகரணமாக கட்டிப்பிடிப்பது , உரசுவது , தொடுவது , தட்டிக்கொடுப்பது , கிள்ளுவது அல்லது பாசாங்கு செய்பது எல்லாமே பாலியல் துன்புறுத்தல் ஆகும் .
 • வரவேற்கப்படாத பாலியல் இழிவான மொழிகள் , பாலியல் நகைச்சுவைகள் , மறைமுகமாய் விரும்பத்தகாத கருது அல்லது செகைகள் பயன்படுத்துவது .
 • பாலுணர்வை தூண்டும் வகையில் உள்ள பொருட்கள் , படங்கள் , விடியோக்கள் அல்லது காட்சியமைப்புகள் .
 • மீண்டும் மீண்டும் நெருக்குநேராகவோ, தொலைபேசியிலோ , அல்லது ஈமெயில் மூலமாகவோ மறுத்தபின்னும் அழைப்பது .
 • பாலுணர்வை தூண்டக்கூடிய வகையில் ஆபாச கடிதங்கள் , குறிப்புகள் , அழைப்புகள் , அல்லது மின்னஞ்சல்கள் வீட்டில் அல்லது வேலை இடத்தில பெறுவதும் பாலியல் துன்புறுத்தலாகவே கருதப்படும் .
 • சட்ட வரையறை : இந்தியா சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தலாக எதை குறிப்பிடறது என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள் .

முன்னெச்சரிக்கைகள் மற்றும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் :

 • உங்கள் குற்றம் அல்ல : பாலியல் துன்புறுத்தலை தவிற்பதின் பொறுப்பு தொல்லை செய்வோர் உடையது . ஒருவரை துன்புறுத்துவதற்கு அவர்கள் ஆடை அணியும் விதம் ஒரு காரணமாகாது.
 • தொல்லை செய்வோரை குற்றம் சாட்டுங்கள் : தொல்லை செய்பவரின் நடவடிக்கைகளுக்கு அவரை பொறுப்பு ஏற்க வையுங்கள் . எதுவும் நடக்காதது போல் நடிக்காதீர்கள் . எல்லோரிடமும் அவன் என்ன செய்தான் என்பதை சொல்லுங்கள் . தனிமை துன்புறுத்துவோரை பாதுகாக்கும் , அதை வெளி கொண்டுவருவதினால் அவர்களின் மதிப்பு குறையும் .
 • தைரியமாக பேசுங்கள் : வலுமையாகவும் , சுய மரியாதையுடன் உள்ள உடல் மொழியிலும் , பேசுங்கள் – கண் பார்த்து , தலை நிமிர்ந்து , தோலை பின் தாங்கி வலுமையாகவும் தீவிரமாகவும் பேசுங்கள். சிரிக்காதீர்கள். பயந்து பணிந்து பேசினால் உங்கள் கருத்தை குறைத்து எடை போடுவார்கள் .
 • மிளகு ஸ்பிரே : மிளகு ஸ்பிரே கடைகளில் எளிதாக கிடைக்கும் . நீங்கள் அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்தாள் , குறிப்பாக இரவு வேலையில் நீங்கள் நடந்து போகும் பொது , மிளகு ஸ்பிரே கைவசம் வைத்து கொள்ளுங்கள் . நீங்கள் ஸ்பிரேயை ஒரு முழங்கை அளவு தூரத்தில் வைத்து பயன் படுத்த வேண்டும் மற்றும் பயன்படுத்தும் போது பின்னால் போக வேண்டும் . இல்லை என்றல் , அது உங்கள் மேலும் தூவி விடும். இடம் இருந்து வலம் மற்றும் மேலிருந்து கீழ் ஸ்பிரே செய்யவும் . அப்படி செய்கையால் அவன் தப்பி ஓடிஏ நினைத்தாலும் முடியாது .
 • கார் வாடகைக்கு எடுக்கும் போது : நீங்கள் கார் வாடகைக்கு எடுக்கும் போது குழந்தை பாதுகாப்புக்காக வைத்துள்ள பூட்டு இயக்கத்தில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் . இது ஒரு சிறிய ஆனால் முக்கியமான ஒரு எச்சரிக்கை ஆகும் .
 • பாலியல் தாக்குதலிருந்து ஜாகிரிதை : பாலியல் துன்புறுத்தலில் மிகவும் மோசமானது பாலியல் தாக்குதல் ஆகும் . இந்தியாவில் அது ஒரு குற்றமாகும் . பாலியல் துன்புறுத்தல் தாக்குதலுக்கு அதிகரிக்க விடாதீர்கள் . துன்புறுத்துவோரை துவக்கத்திலேயே நிறுத்த செய்ய வேண்டும் .
 • காதல் கற்பழிப்பிழிந்து ஜாகிரதை : கேட்டமின் ஒரு மிகவும் ஆபத்தான போதை மருந்து ஆகும் – இதை காதல் கற்பழிப்பு போதை என்றும் அழைப்பார் . ஒருவருடன் சம்மதம் இல்லாமல் உடல் உறவில் ஈடுபடுவதற்கு இந்த மருந்தை பயன் படுத்துவார்கள் . இது தண்ணீரில் எளிதாக கரைந்து விடும் . எனவே இதை நாம் குடிக்கும் ஜூஸ் ல் கலப்பதற்கு வாய்ப்பு உள்ளது . இது போன்ற சம்பவங்கள் உங்களுக்கு நடக்காமல் இருப்பதற்கு எச்சரிக்கையாக இருங்கள் .

நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ பாலியல் தாக்குதலுக்கு ஆனால் என்ன செய்ய வேண்டும் :

 • உங்கள் நண்பர் , உறவினர் அல்லது ஆலோசகர் யாரிடமாவது பேசுங்கள் . நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவருக்கோ பாலியல் துன்புறுத்தல் உணர்ந்தாள், தன்குந்த நடவடிக்கைகளை எடுக்க தயங்காதீர்கள் . உங்களுக்கு கேள்விகளோ சந்தேகங்களோ இருந்தால் , அல்லது புகார் கொடுக்கணும் எண்டு நினைத்தாள் , தொடர்பு கொள்ளுங்கள் .
 • பாலியல் தாக்குதல் கண்டீர்கள் அனால் , தைரியமாக இருந்து அதுக்கு சாக்ஷி ஆகுங்கள் . நீங்கள் உங்களை அந்த பாதிக்கப்பட்டவர் இடத்திலிருந்து சிந்தித்து பாருங்கள் . உங்களுக்கு ஊக்கமும் துணையும் தேவை படும் என்று நினைவில் கொள்ளுங்கள் .
 • பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதலுக்கு எதிரே உள்ள சட்டங்களை குறித்து அறிந்து கொள்ளுங்கள் . எதிர்பாராதவிதமாக , இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு எதிரே ஆன சட்டங்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தான் உள்ளது . இருந்தாலும் , துன்புறுத்துவர் யாராக வேண்டுமானாலும் எந்த பாலினத்தை சார்ந்தவராகவும் இருக்கலாம் என்று நாங்கள் உணர்கிறோம் .
 • பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக இருங்கள் . நடந்த எதுக்கும் பாதிக்கப்பட்டவர் பொறுப்பு அல்ல என்று அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். மற்றும் அதற்க்கு அவர்கள் வெட்கப்படவோ வேதனைப்படவோ தேவையில்லை . ஒரு குழந்தை பாதிக்கப்பட்டிருந்தால் , மிகவும் கவனத்துடன் அவர்களுடன் பேசவேண்டும் . அவர்களுக்கு நீங்கள் உண்டு என்றும் நீங்கள் உங்களால் முடிந்த அளவிற்கு உதவுவீர்கள் என்றும் அவர்களிடம் சொல்லுங்கள் . குழந்தைகளுக்கு , ஒரு ஆலோசனை நிபுணரின் உதவி நாடுவது மிகவும் நல்லதாகும் .
 • உங்கள் கதையை எழுதுங்கள் . உங்களை போலவே இதுபோன்ற சூழ்நிலைக்கு ஆளானவர்களுக்கு உங்கள் கதையை பகிண்ரது கொண்டு உதவுங்கள் . எங்களுக்கு எழுதுங்கள். நாங்கள் பாதிக்கப்பட்டவரின் தனிஉரிமையை மதிக்கிறோம். எங்களுக்கு உங்கள் பெயரை வெளிப்படுத்தாமல் கடிதம் எழுதலாம். நீங்கள் பெயரை எழுதினாலும் , நாங்கள் அதை எங்கள் சின்ன குழுவை தவிர வேற யாரிடமும் வெளிப்படுத்த மாட்டோம்.