பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்

English

இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள முக்கிய குறைபாடு என்னவென்றால், மூன்று பாலினங்களில், ஒரு பாலினத்தை சேர்ந்த ஒருவர் அதே பாலினம்/மற்றோரு பாலினத்தை சேர்ந்தவரை முறைகேடான/தகாத முறையில் பாலினத் தாக்குதல்/உடலுறவு கொள்வதை குற்றமாக கருதவில்லை. தவர, மனைவி விரும்பாத பொழுது, மனைவியிடம் கணவன் உடலுறவு கொள்வதையும் பெரிய குற்றமாக கருதாமல், சிறிய குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகிறது. தற்பொழுது, கற்பழிப்பு சம்பவமானது, கணவனால் 18 வயது முடிந்த மனைவியிடம் நடந்து முடிந்து பின்னர் அதையும் இந்திய அரசியல் சட்டம் குற்றமாக கருதவில்லை வர்மா குழுவினரால் 2013ல் பரிந்துரைக்கப்பட்ட சட்டமானது, எல்லா பாலினத்தை சேர்ந்தவருக்கும், மனைவி விரும்பாத பொழுது கணவன் அவளுடன் உடலுறவு கொள்வதையும் மிகப் பெரிய குற்றமாக கருதப்பட வேண்டும் என்றாலும், அது இதுவரை சட்ட திட்டங்களில் நிறைவேற்றப் படவில்லை. இந்த மாதிரி பாலினத் தாக்குத்தல்களை, நாங்கள் மன்னிக்க முடியாத மிகப் பெரிய குற்றமாக கருதுகிறோம், தவர, இந்த மாதிரி குற்றங்களினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு தகுந்த அறிவுரை கொடுக்கவும் மருத்துவ உதவி செய்யவும் தயாராக இருக்கிறோம்

பின்வரும் புள்ளிகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்:

  • நினைவு: ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் உங்கள் நினைவகத்தை பாதிக்கலாம். ஒரு பாதிக்கப்பட்டவர் நிகழ்ந்த சம்பவத்தை தயக்கத்துடன் நினைவுகூறலாம் அல்லது துல்லியமான நினைவுடன் ஆனால் துண்டு துண்டாக நடந்த நிகழ்வை நினைவில் கொண்டு இருக்கலாம்.
  • உணர்ச்சிகள்: அதிர்ச்சியின் எதிர்வினையாக பாதிக்கப்பட்டவர் எதிர்ப்பாராத உணர்ச்சிகரமான எதிர்வினைகளை அனுபவிக்கலாம். ஒரு சம்பவம் நினைவு கூறும்போது, அவர்கள் உணர்ச்சியில்லாமல் இருக்கலாம் அல்லது தீவிர உணர்ச்சி ஊசலாட்டத்தை அனுபவிக்கலாம்.
  • உடல்ரீதியான உணர்வு: அந்த அதிர்ச்சி ஒரு பாதிக்கப்பட்ட நபரில் தற்காலிக அசைவற்ற நிலையை ஏற்படுத்த கூடும், அது தீவிர பயத்தைத் தூண்டிவிடும் சூழ்நிலைகளில் உடலை உறைய செய்யும். இதை அனுபவிக்கும் ஒரு பாதிக்கப்பட்டவர்க்கு இதை எதிர்த்துப் போராடுவதோ அல்லது இதில் இருந்து விடுபடுவதோ சாத்தியம் இல்லை. இந்த நேரத்தில், அதிர்ச்சியை அனுபவிக்கும் ஒரு நபரால் தங்கள் தசை மறிவினையை கட்டுப்படுத்த முடியாது. சம்பவம் நடத்த போது எதிர்வினை புரியாமைக்கு குற்ற உணர்வு கொள்ளாதே.