ஒரு ஆரோக்கியமான உறவின் அறிகுறிகள் என்ன என்ன ?

English

இன்று நாம் என்ன கற்று கொள்ளலாம் ?

 • பரஸ்பர மரியாதை : ஒருவருக்குஒருவர் அவர்களுடைய தனித்துவத்திற்கு மரியாதை கொடுங்கள் . பாலின எல்லைகளுக்கும் ஒருவருக்கு ஒருவருடைய தனித்துவதிக்கும் மரியாதை கொடுங்கள் .
 • நம்பிக்கை : ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை கொள்ளுங்கள் .
 • நேர்மை : ஒருவருக்கு ஒருவர் நேர்மையாய் இருங்கள்.
 • ஆதரவு : நண்பர்கள் மற்றும் உறவுகளை பராமரித்து கொள்ளுங்கள்
 • நியாயம் /சமத்துவம் : செல்வாக்கை ஏற்று கொள்ளுங்கள் . உறவுகள் என்பது கொடுக்கல் வாங்கல் தான் . உங்கள் கூட்டாளரின் தாக்கம் உங்களுக்கு முக்கியமானது . குறிப்பாக , இது சில ஆண்களுக்கு கடினமாக இருக்கும் .
 • தனி அடையாளங்கள் : உங்களை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் . உங்கள் சுய மரியாதையை உங்கள் உறவை சார்ந்து இருக்க கூடாது . ஒருஒருத்தருளிருந்து தனியா சில நடவடிக்கைகளை வைத்து கொள்ளுங்கள்
 • நல்ல தொடர்பு : விளைவுகளை பற்றி அச்சமின்றி ஒருஒருவருக்கொருவர் தங்களை வெளிப்படுத்துவது
 • பாசம் மற்றும் விளையாட்டு தன்மை : ஒருவரையொருவர் அவர்களுடைய நடவடிக்கையில் ஆர்வம் கொள்ளுவது . உறவுகளில் மோதல்கள் சகஜமானது தான் . அதை மரியாதையுடனும் விளையாட்டுத்தனமாகவும் கொள்ளுங்கள் .

ஆரோக்கியமற்ற உறவின் அறிகுறிகல் என்ன என்ன

 • அடுத்தவருக்காக நீங்கள் உங்களை மாற்றி கொள்ள வேண்டிய கட்டாயம்
 • நீங்கள் வழக்கமாக செய்ய கூடியதோ அல்லது உங்களுக்கு சந்தோசம் தர கூடிய நடவடிக்கைகளை விட வேண்டிய கட்டாயம் .
 • உடல் உறவு கொள்ளவேண்டிய கட்டாயம் அல்லது கட்டாயத்தில் தள்ளப்பட்ட சூழ்நிலை .
 • உங்கள் தனிஉருமைகளுக்கு குறைபாடு மற்றும் எல்லாவற்றையும் அவருடன் பகிண்ரது கொள்ள வேண்டிய கட்டாயம் .
 • ஒரு வாக்குவாதத்தில் பொது , கூச்சல் அல்லது உடல் ரீதியாக உங்களை துன்புறுத்துவது .
 • நீங்களோ அல்லது உங்கள் கூட்டாளரோ பாதுகாப்பான பாலியல் முறைகளை உபயோகிக்க மறுப்பது
 • உங்களுக்கு பொதுவான நண்பர்கள் இல்லாதது அல்லது ஒருவருக்கொருவர் தன நண்பர்கள் அல்லது உறவினைகளிக்கு இடையே மரியாதை குறைவாக இருப்பது .
 • ஒருவருக்கு ஒருவர் நேரம் செலவிடாமல் இருப்பது

ஆரோக்கியமற்ற உறவில் நான் எப்பொழுது ஒரு நிபுணரின் உதவியை நாடலாம் ?

 • உங்கள் உறவில் உங்களை தவறாக நடத்துவதாக நீங்கள் உணர்ந்தாள் . உங்கள் கூட்டாளர் உங்களை உடல் ரீதியாக துன்புறுத்தியலோ அல்லது உங்களை பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்தியலையோ , அது ஒரு ஆரோக்கியமற்ற உறவின் அறிகுறி ஆகும் . உங்களை பாதுகாக்க சட்டங்கள் உள்ளன . திருமண கற்பழிப்பு , பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதலை குறித்து உள்ள விவாரங்களை படித்து அதை எப்படி தடுத்து நிறுத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள் .
 • உங்கள் உறவில் நீங்கள் சதோஷமாக இல்லை என்று நீங்கள் உணர்த்தாலோ மற்றும் தனியாக இருப்பதற்கு பயந்து அல்லது குற்ற உணர்ச்சியுடன் நீங்கள் அந்த உறவில் இருப்பதாக உணர்ந்தாலோ , நீங்கள் ஒரு ஆலோசனையாளருடன் பேச வேண்டும் .