குழந்தை வன்முறையாளரிடம் காணப்படும் அறிகுறிகள்.

English

குற்றம் புரிபவரின் நடத்தையை வைத்தே ,சிலசமயம், பாலியல் வன்முறை பற்றி அறிந்து கொள்ள முடியும். குற்றம் புரிபவர் பல நேரங்களில் ,குழந்தைக்கு நன்கு அறிமுகம் ஆனவராகவே இருக்கிறார் என்பதை நினைவில் கொள்க. கீழ்காணும் நடத்தைகளுடன் ஒரு நபர் குழந்தையின் அருகாமையில் இருந்தால்,அவரை கண்காணிக்க வேண்டும்:

 1. குழந்தை , தனது சொந்த எல்லைகளை அமைத்துக் கொள்வதை மறுப்பது,அப்படி அமைத்து கொள்வதை கேலி செய்வது அல்லது சிறுமைப்படுத்தும் வார்த்தைகளால் மறுப்பது.
 2. குறிப்பிட்ட நபரின் கவனிப்பையோ அல்லது தொடுதலையோ குழந்தை விரும்பாத போதும் அவர்,குழந்தையை அனைத்துக் கொள்ளவோ ,முத்தம் தரவோ ,கிச்சுகிச்சு மூட்டவோ, தொடவோ ,விளையாட்டு சண்டை போடவோ அல்லது குழந்தையை தன்னோடு வைத்திருப்பதையோ வலியுறுத்துவது.
 3. பெரியவர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டிய தனிப்பட்ட விஷயங்கள் அல்லது நடவடிக்கைகளை குழந்தையிடம் பகிர்ந்து; தனது உடல் மற்றும் உணர்ச்சிகளின் வடிகாலாக குழந்தையை மாற்றுவது.
 4. அடிக்கடி குழந்தையிடம் பாலியல் சம்பந்தப்பட்ட படங்களை சுட்டிக்காட்டுவது அல்லது குழந்தையின் முன்னிலையில் பொருத்தமற்ற பாலுணர்வை தூண்டக்கூடிய நகைச்சுவைகளை சொல்வது.
 5. வெளிப்படையான கரிசனம் இல்லாமல் ஒரு குழந்தைக்கு;பெரியவர்களுக்கு உண்டான பரஸ்பர பாலியல் நடவடிக்கைகளை வெளிப்படுத்துவது.
 6. குழந்தைகளிடமோ அல்லது வளர்இளம் பருவத்தினரிடமோ ரகசிய பரிமாற்றம் செய்வது. (உம்: விளையாட்டுக்கள், போதை பொருள், மது,அல்லது பாலியல் சாதனங்களை பகிர்வது) அல்லது தேவைக்கு மிகஅதிகமான நேரம் மின்னஞ்சல் செய்வது, செய்தி பரிமாறுவது அல்லது தொலைபேசியில் அழைப்பது.
 7. ஒரு குறிப்பிட்ட குழந்தை அல்லது வளர் இளம் குழந்தையின் பாலினத்தில் அதிகப்படியான அக்கறை காட்டுவது (உம்: மீண்டும் மீண்டும் வளரும் குழந்தையின் உடல் மாற்றம் குறித்து பேசுவது அல்லது குழந்தையிடம் எதிர்பாலின நட்புகளுடனான உறவு குறித்து கேட்பது).
 8. குழந்தையுடன் தடையற்ற தனிமையில் நீண்ட நேரம் இருக்கும்படி செய்து கொள்வது அல்லது அப்படி இருக்க வேண்டும் என குழந்தையை வலியுறுத்துவது.
 9. குழந்தைகளை தனியாக சிறப்பு சுற்றுலா அழைத்து செல்வது,எந்தவொரு காரணமும் இல்லாமல் பரிசு பொருட்கள் அல்லது பணம் தருவது.
 10. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்க இயலாத போது , குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஒத்து கொள்வது.
 11. குழந்தைகள் அல்லது இளம் சிறார் குளியலறையில் இருக்கும்போது அடிக்கடி உள்ளே செல்வது.
 12. முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட தொடர்ந்து குழந்தைகளை அனுமதிப்பது.

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் குழந்தைகளிடம் பொதுவாக காணப்படும் சில அறிகுறிகள் இங்கே. இளம்பருவத்தினரிடம் காணப்படும் குறிப்பிட்ட அறிகுறிகள் இங்கே. வளர்இளம் பருவத்தினர் வெளிப்படுத்தும் குறிப்பிட்ட அறிகுறிகள் இங்கே.

பாதிக்கப்படும் பெரியவர்களிடம் சில சமயம் காணப்படும் அறிகுறிகள் பற்றி படிக்க இங்கே.

நீங்கள் யாருக்காவது பாலியல் வன்முறை நடைபெறுவதாகச் சந்தேகப்பட்டால், தயவுசெய்து, மௌனமாக இருக்காமல் அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள். நீங்கள் எப்படி உதவ முடியும் என்பது குறித்த சில தகவல்கள் இங்கே