முகப்பு பக்கம்

English

Nakshatra

Nakshatra (Reg No. 836/12) ஒரு அரசு சாரா லாப நோக்கற்ற அமைப்பு , கடத்துதல் மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிரே செயல் பட்டு வருகிறது. கற்பழிப்பு நெருக்கடி மையம் (RCC) ஒன்றை நாங்கள் சென்னையில் அமைத்துள்ளோம் . 2012 ம் ஆண்டு முதல் நாங்கள் சென்னையில் உள்ள அடித்தட்டு சேரி சமுதாயத்திலுள்ள பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுது குடுபங்களுக்கு செயல்பட்டு வருகிறோம் . எங்களுடைய திட்டங்கள் மற்றும் சேவைகள் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்க்காக வடிவமைக்கப்பட்டுள்ளது .

நாங்கள் குறிப்பாக குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ளது . நாங்கள் குழந்தை பாலியல் துஷ்ப்ரயோகம் குறித்து சமுதாயத்தில் விழிப்புணர்வும் வலிமைப்படுத்தவும் செயல் படுகிறோம்கு. ழந்தை பாலியல் துஷ்ப்ரயோகத்திலிருந்து புனர்வாழ்வு மற்றும் மீட்பு எங்கள் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

எங்கள் நோக்கம் முறைசார்ந்த மற்றும் முறைசாரா கல்வி ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் உள்ள பாலியல் வன்முறை பிரச்சனைக்கு தீர்வு காணுவது தான்.

விழிப்புணர்வு மற்றும் சமூக ஆதரவு மூலம் பாலியல் வன்முறையை நாம் தடுக்கவும் அதை சம்மாளிக்கவும் முடியும்.

இந்த வலைத்தளம் இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். இங்கே, நாங்கள் பாலியல் வன்முறை பற்றி விழிப்புணர்வு முயற்சியில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது நெருங்கியவர்கள் தகவல் வழங்க முயற்சி செய்துள்ளோம். பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிரே உள்ள சட்ட உரிமைகளை குறித்துள்ள விவரங்களும் உள்ளது. பாலியல் குற்றங்கள் புரிந்தவர் மட்டுமே பொறுப்பு என்றும் பாதிக்கப்பட்டவர் அல்ல என்ற உண்மையை நாங்கள் வலியுறுத்துகிறோம்.