பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சென்னையில் Nakshatra துவங்கிய RCC, கீழ்கண்ட சேவைகளை வழங்குகிறது:
- ஆலோசனை: பாலியல் வன்முறைக்கு ஆளானோருக்கும் அவள்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இலவச ரகசிய ஆலோசனை. பாதிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் மன நலமே அனைத்தையும் விட முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். சில நேரங்களில் நண்பர்களுக்கும் உறவினர்குள்ளும் ஆலோசனை தேவை படலாம் – அவர்களுக்கும் உதவ நாங்கள் காத்திருக்கிறோம். தொலைபேசி எண்: 0091-9003058479, 0091-7845629339. எங்களை தொடர்பு கொள்ள மேலும் சில வழிகள் இங்கே. பாதிக்க பட்டவர்களின் சார்பாக மற்றவர்களும் எங்களை தொடர்பு கொள்ளலாம். நீங்கள் எப்படி உதவலாம் என்று இங்கே படிக்கலாம்.
- இளைஞர்களுக்கு சிறப்பு ஆலோசனை: பாலியல் வன்முறைக்கு ஆளான 12 முதல் 18 வயதுக்குற்பட்ட இளைஞர் இளைஞிகளுக்கு சிறப்பு ஆலோசனை இலவசமாக வழங்குகிறோம்.
- மருத்துவ மற்றும் சட்ட ஆலோசனை: மருத்துவ பரிசோதனைகள், காவல் துறை மற்றும் சட்ட நடவடிக்கைகளில் துணை இருப்போம். எங்கள் சேவைகள் அனைத்தும் ரகசியமாகவும் இலவசமாகவும் இருக்கும். நாள்தோறும், இருபத்து நான்கு மணி நேரமும் எங்களை தொடர்பு கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளக்கூடிய வழிகளை பற்றிய ஆலோசனைகள் எங்களிடம் கிடைக்கும். மருத்துவ சிகிச்சை பெருவது குறித்து மற்றும் காவல் துறையை அணுகலாமா வேண்டாமா என்பது குறித்த ஆலோசனைகளும் எங்களிடம் கிடைக்கும்.
- சமூக கல்வி மற்றும் பயிற்சி முகாம்கள்: Nakshatra RCC பாலியல் வன்முறை, தொல்லை மற்றும் பாலின கருத்தாக்கம் போன்ற விஷயங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சியை மாணவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.
- தற்காப்பு: பெண்களுக்கான தற்காப்பு பயிற்சிகளும் உண்டு. இதில் தவிர்ப்பு, மன மற்றும் உடல் பாதுகாப்பு முறைகள் கற்றுவிக்க படும்.
பாலியல் வன்முறை பாதிக்கப்பட்டவரின் தவறு இல்லை என்பது Nakshatra RCC யின் தலையாய நம்பிக்கை. ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொரு வழியில் ஆறும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். பாதிக்கப்பவரும் உரிமைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்களின் உணர்வுகளும் எங்களுக்கு முக்கியம். அதனால் எல்லா விஷயங்களிலும் இறுதி முடிவு உங்களுடையதாகவே இருக்கும். உங்கள் முடிவு எதுவாயினும் அதில் நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்போம்.