திருமண கற்பழிப்பு

English

இந்திய தண்டனை சட்டப்படி திருமண கற்பழிப்பு குற்றத்திறான செயல் அல்ல என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். 2013ம் ஆண்டு துவகத்தில் நியமிக்கப்பட் வர்மா குழு, நமது நாட்டின் பாலியல் குற்றம் சார்ந்த சட்டங்ளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் திருமண கற்பழிப்பு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 375 மற்றும் 376 கீழ் தண்டனை கொடுக்கக்கூடிய குற்றச் செயலாக சேர்க்க வேண்டும் என வலுவாக பரிந்துரைத்துள்ளது. இருந்தபோதிலும், இதுநாள் வரை இதற்கான சட்டத்திருத்தங்கள் செய்யவில்லை. திருமண கற்பழிப்புகளை குற்றச் செயலாக கருத வேண்டுமென்று நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் (PWDV) விதி 2005. சில பாதுகாப்பு வழங்குகின்றன.

பின்வரும் புள்ளிகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்:

  • நினைவு: ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் உங்கள் நினைவகத்தை பாதிக்கலாம். ஒரு பாதிக்கப்பட்டவர் நிகழ்ந்த சம்பவத்தை தயக்கத்துடன் நினைவுகூறலாம் அல்லது துல்லியமான நினைவுடன் ஆனால் துண்டு துண்டாக நடந்த நிகழ்வை நினைவில் கொண்டு இருக்கலாம்.
  • உணர்ச்சிகள்: அதிர்ச்சியின் எதிர்வினையாக பாதிக்கப்பட்டவர் எதிர்ப்பாராத உணர்ச்சிகரமான எதிர்வினைகளை அனுபவிக்கலாம். ஒரு சம்பவம் நினைவு கூறும்போது, அவர்கள் உணர்ச்சியில்லாமல் இருக்கலாம் அல்லது தீவிர உணர்ச்சி ஊசலாட்டத்தை அனுபவிக்கலாம்.
  • உடல்ரீதியான உணர்வு: அந்த அதிர்ச்சி ஒரு பாதிக்கப்பட்ட நபரில் தற்காலிக அசைவற்ற நிலையை ஏற்படுத்த கூடும், அது தீவிர பயத்தைத் தூண்டிவிடும் சூழ்நிலைகளில் உடலை உறைய செய்யும். இதை அனுபவிக்கும் ஒரு பாதிக்கப்பட்டவர்க்கு இதை எதிர்த்துப் போராடுவதோ அல்லது இதில் இருந்து விடுபடுவதோ சாத்தியம் இல்லை. இந்த நேரத்தில், அதிர்ச்சியை அனுபவிக்கும் ஒரு நபரால் தங்கள் தசை மறிவினையை கட்டுப்படுத்த முடியாது. சம்பவம் நடத்த போது எதிர்வினை புரியாமைக்கு குற்ற உணர்வு கொள்ளாதே.