மருத்துவ உதவி

English

2000வது ஆண்டு உட்ச நீதிமன்ற ஆணைப்படி (கர்நாடக அரசு v மஞ்சன்னா) முதல் தகவல் அறிக்கையை ( FIR) பதிவு செய்யாது இருந்தாலும் நாட்டில் உள்ள எந்தவொரு மருத்துவ நிலையமும், பாலியல் வன்முறைக்கு ஆட்பட்ட பெண்ணிற்கோ அல்லது குழந்தைக்கோ மருத்துவ உதவி செய்ய மறுக்க முடியாது. நடைமுறையில், முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்தபின் மருத்துவ உதவியை நாடிச் செல்லும் போது சாட்சிகள் அழிந்துவிடக்கூடும். முக்கியமாக மாதவிடாய் பருவத்தில் இருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளும் இது நேரலாம்.

இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 164A பாலியல் வன்முறைக்கு உள்ளானவர்களைப் பரிசோதனை செய்யும்போது கடைபிடிக்க வேண்டியவற்றை வரையறுத்து இருக்கிறது.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

 1. பாதிக்கப்பட்டவர், அரசு மருத்துவ மனையில் உள்ள பதிவு செய்யப்பட்ட மருத்துவர் அல்லது நிர்வாகியால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவர்கள் இல்லாத போது வேறு பதிவு செய்யப்பட்ட மருத்துவரால் பரிசோதனை செய்யப்படலாம். எப்படியானாலும், எந்தவொரு மருத்துவ பரிசோதனை செய்வதற்கும் முன் பாதிக்கப்பட்டவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர் இளவயதினராகவோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவராகவோ இருப்பின் , அவரது பெற்றோரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
 2. மருத்துவ அறிக்கையில் மருத்துவ பயிற்சியாளர் கட்டாயம் சேர்க்க வேண்டிய சில பகுதிகளாவன:
  1. பாதிக்கப்பட்டவரின் பெயர் , முகவரி மற்றும் அவரை அழைத்து வந்தவர் யார் என்பது;
  2. பாதிக்கப்பட்டவரின் வயது;
  3. டி.என்.ஏ. விபரகுறிப்பிற்க்காக பாதிக்கப்பட்டவரிடம் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களின் விளக்கம்;
  4. பாதிக்கப்பட்டவரிடம் ஏதாவது காய அறிகுறிகள் காணப்படின், அதன் விபரம்;
  5. பாதிக்கப்பட்டவரின் பொதுவான மனநிலை;
  6. பரிசோதனை செய்யப்பட்ட நேரம், பரிசோதனைக்கு முன் ; பாதிக்கப்பட்டவரிடம் வாங்கப்பட்ட ஒப்புதல்.
 3. மருத்துவ பயிற்சியாளர் செய்ய வேண்டிய மற்ற முக்கிய பரிசோதனைகளாவன:
  1. பாதிக்கப்பட்டவர் ஏதாவது பாலியல் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா என்பதை கண்டறிதல். சில சமயம் தொடர் பரிசோதனைக்காக பாதிக்கப்பட்டவர் சில வாரங்களுக்குப் பின் வர நேரலாம்.
  2. பாதிக்கப்பட்டவர் எச்.ஐ.வி. அல்லது வேறு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறாரா என கண்டறிதல். மேலும் எப்பிடைடஸ்-Bக்கான பரிசோதனை.
  3. பாதிக்கப்பட்டவர் பெண்ணாயிருப்பின்; அவர் கருவுற்று இருக்கிறாரா என கண்டறியும் சோதனை. (இதில் தயவுசெய்து கருகலைப்பு குறித்த தகவல்களைப் பார்க்கவும்.).
 4. பரிசோதிக்கும் மருத்துவர் , பாதிக்கப்பட்டவரை மன மற்றும் உளவியல் நலம் குறித்த ஆலோசனைக்கோ அல்லது கலந்தாய்வுக்கோ பரிந்துரைக்கலாம்.
நினைவில் கொள்க:

பாதிக்கப்பட்டவர் பெண் குழந்தையாய் இருப்பின்; பெண் மருத்துவ பயிற்சியாளரே பரிசோதனை செய்ய வேண்டும்.

நினைவில் இருக்க வேண்டிய விஷயங்கள்:

 1. சாட்சியாக தற்போது தேவை இல்லாததால், இரு விரல் பரிசோதனையை பாதிக்கப்பட்டவர் மறுக்கலாம்.
 2. மருத்துவ உதவிக்கு முதல் தகவல் அறிக்கை தேவையில்லை. மருத்துவ உதவி செய்ய மறுப்பது ,இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 166B யின் கீழ் சிறை தண்டனைக்கு உரியது.
 3. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருந்தால், காவலர்கள் பாதிக்கப்பட்டவரை ; குற்றம் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
 4. பாதிக்கப்பட்டவருக்குச் செய்யப்படும் எல்லா பரிசோதனைகளின் செயல்முறைகளையும் பரிசோதனைக்கு முன்னரே அவரிடம் தெரிவிக்க வேண்டும்.
 5. பதிவு செய்யப்பட்ட மருத்துவர் தாமதிக்காமல் பரிசோதனை அறிக்கையை புலனாய்வு அதிகாரிக்கு அனுப்பலாம். அவர் அதை குற்றவியல் நீதிபதிக்கு அனுப்பி வைக்கலாம்.
 6. எந்தவித கட்டணமும் இன்றி , உங்களுக்குத் தரப்படும் மருத்துவ அறிக்கைகளின் நகலை தயவுசெய்து பத்திரமாக வைத்திருக்கவும்.
 7. குழந்தைகளை பாலியல் வன்முறையில் இருந்து காப்பாற்றும் சட்டம 2012ன் படியும்,பிரிவு 376,376A-E யின் திருத்தத்தின் படியும், மருத்துவ பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும்.
 8. கலந்தாய்வுக்காக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டு இருந்தால் அதை புறக்கணிக்காதீர்கள். பாலியல் வன்முறையானது நீங்கள் நினைந்திராத வகையில் உங்களுக்கு சுமை ஆகலாம். குணமாவதற்கான நடைமுறைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம். Nakshatra பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச கலந்தாய்வை வழங்குகிறது. பாதிக்கப்பட்டவர் மனசோர்வுடன் இருக்கும்போது செய்யக்கூடிய செயல்கள் இங்கே

பாலியல் வன்முறை பற்றியும் ,அதற்கு எதிரான சட்டங்கள், மற்றவை பற்றியும் அறிய, தயவுசெய்து இங்கே படிக்கவும்.