இன்று நாம் என்ன அறிந்து கொள்ளலாம் ?

English

இந்திய சமூகத்தில் பாலியல் பாகுபாடு என்பது ஒரு பெருத்துள்ள வன்கொடுமை ஆகும். ஒரு பெண் அவள் கருவைக்காணும் முதல் நொடி முதல் இறுதி மூச்சு வரை அனுபவிக்கும் பாகுபாடு இது. இது திருநங்கையர்க்கு இன்னும் கொடியது.சமீப காலம் வரை நம் சமூகத்தில் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை!. பாலியல் சமத்துவத்தின் அறியாமையால் தான் பல பாலியல் வன்முறைகள் நடக்கிறது. நாம் நமது பாலியல் வேறுபாடுகளை அறிந்து கொண்டு, நமது ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் மதித்தல் வேண்டும். அது நடக்காத பொது அதை எதிர்த்து நாம் குரல் உயர்த்த வேண்டும்.

பாலியல் சமத்துவத்தைப் பற்றி அறிக :ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டான ஒரே வேறுபாடு பாலியல் வேறுபாடு மட்டுமே. இது இயற்கையானது மற்றும் இனப்பெருக்கத்திற்கு அவசியமானது. இது ஒரு குறைபாடு அல்ல. (மேலும் அறிக)

நல்ல உறவுமுறையைப் பற்றி அறிக :ஒரு நல்ல காதல் உறவுமுறை என்பது ஒருவரை மற்றவர் ஊக்குவிப்பதே,வருந்தவைப்பது அல்ல. ஒருவரை ஒருவர் மதித்தலும், அவரவர் தனியுரிமையை மதித்தலும் வேண்டும். .(மேலும் அறிக)

நல்ல பாலியல் உறவுமுறையைப் பற்றி அறிக :பேச்சுத்தொடர்பும் மதிப்பும் ஒரு நல்ல உறவுமுறைக்கு முக்கியமானவை இதில் உடல் சார்ந்தவை மட்டும் வேறல்ல. (மேலும் அறிக)

சம்மதத்தைப் பற்றி அறிக :சம்மதத்திற்கு முன்பான உறவு, கற்பழிப்பாக கருதப்படும். சம்மதம் என்பது ஒரு சிறிய கருத்து. “ஆம்” என்று வெளிப்பட சொல்வதற்கு முன்பு , “இல்லை” என்றே அர்த்தமாகும். (மேலும் அறிக)

பாலியல் தொல்லையைப் பற்றி அறிக :எந்த ஒரு விரும்பத்தகாத செயலோ நடத்தையோ பாலியல் தொல்லை ஆகும் (நேராகவோ அல்லது மறைமுகமாகவோ ). நீங்கள் பாலியல் தொல்லையில் உள்ளதாக உணர்ந்தீர்களானால். (மேலும் அறிக)

Advertisement