பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண

English

பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டு; மீண்டு வாழ்பவரின் உடல், மன,உளவியல் அளவில் பாதிப்பு இருக்கும். இந்த பாதிப்புக்களை கடந்து வருவது அவ்வளவு சுலபமில்லை.ஆனால,சரியான உதவி மற்றும் ஆதரவுடன் எளிதாக சமாளிக்கலாம். நீங்கள் , அதைப் பற்றி மேலும் படித்து தெரிந்து கொள்வது, பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்த; சரியான வழி கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும். பல சமயங்களில், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள்; தங்களது பாதிப்பை பற்றி வெளியே சொல்வது இல்லை. தங்களைஅந்த இழி செயலுடன் தொடர்புபடுத்திக் கொள்ள விரும்பாததும், அதற்காக சங்கடப்படுவதும் ; வெளியே சொல்லாமல் இருக்க சில காரணங்கள் ஆகும். வன்முறையாளர், இதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டுவதே கவனத்திற்கு உரியது. குழந்தை பாலியல் வன்முறை சம்பவங்களில் பெரும்பாலும் இதுவே நடக்கிறது. பெரும்பாலும்,வன்முறையாளர் எந்த வகையிலாவது குழந்தைக்கு தெரிந்தவராகவே இருப்பதால்,  நடப்பதில் தவறொன்றும் இல்லை என்றும், அப்படியே குழந்தை நடப்பதை வெளியே சொன்னாலும் ,யாரும் இதை நம்பமாட்டார்கள் என்றும் சொல்லி குழந்தையை நம்ப வைக்கிறார்கள். நாங்கள் பாதிக்கப்பட்டவரிடம் காணப்படும் அறிகுறிகளை முடிந்தவரை இங்கே பட்டியல் இடுகிறோம். ஆனாலும், சில தனிப்பட்ட சம்பவங்களில்;இவையல்லாது வேறு அறிகுறிகள் தென்படலாம். நீங்கள், உங்களது சொந்த கண்காணிப்பு மற்றும் சந்தேகத்தின் மூலமே நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்.