பாதிக்கப்பட்டவர்களுக்கு

English

பாலியல் வன்முறைக்கெதிரான நம் நாட்டின் சட்டங்கள் எல்லா மக்களும் பயன்படும் வகையில் இல்லை என்றே கூற வேண்டும். குறிப்பாக, ஆண்களும் திருநங்கைகளும் சந்திக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கு தீர்வு தரும் விதமாக எந்த ஒரு சட்டப்பிரிவும் இல்லை. பெரும்பாலான சட்டங்கள், பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்றே வகுத்துரைக்கின்றன. சமீபகாலமாக, நாட்டின் பல்வேறு அமைப்புகள், இவ்வாறு விடுபட்ட பாலினத்தவரையும் காக்கும் விதமாக சட்டங்களை மாற்றியெழுத வேண்டுமென போராடி வருகின்றன.

நீங்கள் சந்தித்த அதிர்ச்சிகரமான அனுபவத்தால் எதிர்செயலாற்றுவது என்பது இயல்பானது. அது உங்கள் தவறு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒத்திசைவாக என்ன நடந்தது என்பதை நினைவில் வைப்பதில் பிரச்சனை அல்லது ஊசலான மனநிலையை அனுபவித்தல் அல்லது எதையும் உணராத்திருத்தல் என்பது மிகவும் இயல்பானது. ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில் பல்வேறு மக்களும் பல்வேறு விதமாக நடந்து கொள்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் என்ன அனுபவித்தீர்களோ அது அதிர்ச்சி தரக்கூடியது. ஆனால் நீங்கள் என்ன செய்ய போகிறீர்களோ அது இயல்பானது. இங்கே மீட்டெடுப்பு செயல்முறையை எளிதாக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டறியவும். மதிப்பிடல் இல்லா சட்ட, மருத்துவ மற்றும் ஆலோசனை உதவிக்கு எங்கள் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.

பாலியல் வன்முறைக்கு ஆளான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், 8882498498 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SIF என்ற அமைப்பு, இந்த எண்ணிற்கு வரும் அழைப்புகளை கையாள்கிறது.

அன்றாடம் சந்திக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான சட்டங்கள் பற்றி திருநங்கைகளுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். எங்களால் முடிந்த சட்ட உதவிகளையும், மருத்துவ உதவிகளையும், பாதிக்கப்பட்டவர்களின் மன உளைச்சல்களை போக்கவும் நாங்கள் நிச்சயமாக உதவி செய்வோம்.

மருத்துவ உதவி: பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்களுக்கு இலவச மருத்துவ உதவி தரப்பட வேண்டுமென இந்திய சட்ட எண் 376 மற்றும் POCSO சட்டம் அறிவுறுத்துகிறது. இதர பாலியல் வன்முறைகளுக்கு, பாதிக்கப்பட்டவருக்கு வேண்டிய மருத்துவ செலவுகளுக்கு, அந்த குற்றவாளியே பொறுப்பேற்க வேண்டுமெனவும் அச்சட்டம் கூறுகிறது. எந்த மருத்துவ மையமும், பாலியல் வன்முறைக்காளானவர்களுக்குத் தர வேண்டிய மருத்துவ சேவைகளை நிராகரிக்க உரிமை இல்லையென்று இந்திய சட்ட எண் 166B அறிவுறுத்துகிறது. இது பற்றிய மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்திற்கு செல்லவும்.

மனநல ஆலோசனை: பாலியல் வன்முறையை சந்தித்தவர்கள், பெரும்பாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இதற்கான தீர்வு பெற, தகுந்த மன ஆலோசனை பெற வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்காகவே, Nakshatra இயக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மன ஆலோசனை பெரும் வசதியை வழங்குகிறது. உடனடி மற்றும் தற்காலிக தீர்வுக்கு, இந்த தளத்தில் உள்ள வழிகளை பின்பற்றவும்.