உங்களை நீங்களே என்ன செய்யலாம்

English

 1. பின்வரும் புள்ளிகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்:
  • நினைவு: ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் உங்கள் நினைவகத்தை பாதிக்கலாம். ஒரு பாதிக்கப்பட்டவர் நிகழ்ந்த சம்பவத்தை தயக்கத்துடன் நினைவுகூறலாம் அல்லது துல்லியமான நினைவுடன் ஆனால் துண்டு துண்டாக நடந்த நிகழ்வை நினைவில் கொண்டு இருக்கலாம்.
  • உணர்ச்சிகள்: அதிர்ச்சியின் எதிர்வினையாக பாதிக்கப்பட்டவர் எதிர்ப்பாராத உணர்ச்சிகரமான எதிர்வினைகளை அனுபவிக்கலாம். ஒரு சம்பவம் நினைவு கூறும்போது, அவர்கள் உணர்ச்சியில்லாமல் இருக்கலாம் அல்லது தீவிர உணர்ச்சி ஊசலாட்டத்தை அனுபவிக்கலாம்.
  • உடல்ரீதியான உணர்வு: அந்த அதிர்ச்சி ஒரு பாதிக்கப்பட்ட நபரில் தற்காலிக அசைவற்ற நிலையை ஏற்படுத்த கூடும், அது தீவிர பயத்தைத் தூண்டிவிடும் சூழ்நிலைகளில் உடலை உறைய செய்யும். இதை அனுபவிக்கும் ஒரு பாதிக்கப்பட்டவர்க்கு இதை எதிர்த்துப் போராடுவதோ அல்லது இதில் இருந்து விடுபடுவதோ சாத்தியம் இல்லை. இந்த நேரத்தில், அதிர்ச்சியை அனுபவிக்கும் ஒரு நபரால் தங்கள் தசை மறிவினையை கட்டுப்படுத்த முடியாது. சம்பவம் நடத்த போது எதிர்வினை புரியாமைக்கு குற்ற உணர்வு கொள்ளாதே.
 2. புகார். குழந்தை திருமணத்திற்கு உடந்தையாவைரோ அல்லது முதல் குற்றவாளியோ கடுமையான தண்டணைக்கு உள்ளாக்க பட வேண்டியவர்கள் பல சமயங்களில் காவல் நிலையங்களில் குழந்தை திருமணம் குறித்து கொடுக்கப்படும் புகார்களை எடுத்து கொள்வதில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணே புகார் கொடுக்கும் பட்சத்தில் கூட சிலரின் செல்வாக்கு, பதவி காரணம் காட்டி இந்த புகார்கள் மறுக்க படுகிறது. அந்த நிலையில் மனம் தளராமல் அடுத்த கட்ட நடவடிக்கையாக சில உதவி அமைப்புகளுக்கோ அல்லது பொது நலத்கிதாண்டு ஆர்வலர்களுக்கோ, நக் ஷ்த்ரா போன்ற அமைப்புகளுக்கோ தெரிவிக்கும் பட்சத்தில் அந்த அமைப்பே அந்த பெண்ணுக்கு சட்ட ரீதியான உதவிகளையும் , உடல் மற்றும் மனரீதியான மருத்துவ கிகிச்சைக்கும் உதவிகரம் நீட்ட வருகிறார்கள்.
 3. ஆலோசனை மையங்களின் உதவி. பாலியல வன்முறை என்பது ஒருவரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கும் விஷயம். ஒருவர் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சரியான உதவி கூடங்களும், ஆலோசனை மையங்களும் இதிலிருந்து மீண்டு வந்து ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
 4. பல பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை என்னும் ஆயுதத்தை கையில் எடுத்து கொண்டு தங்களது வாழ்க்கையை முடித்து கொள்கிறார்கள். இந்த தவறான முடிவினை எடுக்காமல் இருக்கவும், புது தன்னம்பிக்கையை உருவாக்கவும் ஆலோசனை மையங்கள் பெரும் பங்குவகிக்கிறது.
 5. நம்மை நாமே காயப்படுத்தி கொள்வதிலிருந்து எப்படி தப்பிப்பது:
  • உங்களுக்கு பிடிததமானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். அது நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை குறித்தோ அலலது இதற்கு தொடர்பு இல்லாத ஏதோ ஒரு தலைப்பின் கீழோ அனுப்பலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சிந்தனை சிதறல் ஏற்படும். நடந்ததையே நினைத்துக்கொண்டிருக்காமல் கவனத்தை திசை திருப்ப ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
  • ஒரு மனிதன் தன்னை காயப்படுததி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்போது, எந்த இடத்தை காயப்படுத்தி பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அந்த இடத்தில் மருதாணி கொண்டு படம் வரந்து கவனத்தை கிதற செய்யலாம்.
  • எப்பொழுதும் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் பழையதை மறக்க முற்படுவோம். செய்தித்தாளையோ அல்லது இதழ்களையோ சிறிய துண்டுகளாக வெட்டுவதன் மூலம் மன அழுத்தம் குறையும்.
 6. பதட்டத்தை குனறப்பதும், கடந்த கால கசப்பான நிகழ்வுகளையும் மறப்பது எப்படி:
  • ஆழமான சுவாசம். நீங்கள் பதட்டமாக உணரும் நோத்தில் கண்களை மூடிக் கொண்டு, கைகளை உங்களது வயிற்றில் வைத்துக்கொண்டு ஆழமாகவும், மெதுவாகவும் மூச்சுக்காற்றை இழுத்து சுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் மூச்சுக்காற்றை சுவாசித்து வெளியேற்றம்பேரதும் வயிற்றின் மேல் உள்ள கைகள் அதற்கேற்றவாறு அசையும்.
  • கண்திறந்து பார். உன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் பார்க்க வேண்டும். உன் அருகே உள்ள அனைத்து பொருட்களையும் அல்லது அதனுடைய வண்ணங்களையும் சுற்றியுள்ள தளபாடங்கள் எத்தனை என்பதையும் கனாக்கெடுத்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மனதின் கெட்ட நினைவுகளை எழ விடாமல் தவிர்க்க முடியும்.
  • கவனி. தனியாக இருக்கும் நிலையில் மனமானது பழைய நினைவுகளை அசை போட துவங்கிவிடும். அதனை தவிர்க்க நல்ல இசையை கேட்கலாம்.
  • முகர்ந்து பார். நல்ல வாசனைகள் மனதை சந்கதோசமாக வைத்து கொள்ள உதவும்.
  • உணர்ந்து பார். நல்ல குடான தேனீர் குவளை அல்லது நல்ல குளிர்ந்த பனிக் கட்டியையோ பிடித்துப்பார் எப்படி உணர்கிறாய் என்று உன்னை நீயே பரிசோதித்து பார்.
 7. உங்களது கருத்துகள் வாவேற்கப்படுகிறது. நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவரோ பாலியல் கொடுமைக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்தவரா? உங்களது கதையை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்களது கதை பல பேருக்கு தன்னம்பிக்கை மருந்தாக அமையலாம். உங்களது பெயப்ரோ, அல்லது உங்களது அந்தாங்கத்தை பாதிக்கும்விதமான எந்த ஒரு செய்தியையும் இந்த வலைதளத்தில் எந்த குழ்நிலையிலும் வராமல் பார்த்துக்கொள்வோம்.