நீங்கள் ஒருவருடன் பாலியல் நடவடிக்கையில் ஈடு படுவதற்கு முனபாக என்னெல்லாம் விஷயங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்?

English

இன்று நாம் என்ன ற்றுக்கொள்ளலாம்:

  • அந்த நபர் உங்களிடம் சுதந்திரமாகவும் விருப்பமாகவும் தான் பங்கேற்கிறாரா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • மது மற்றும் போதையின் மயக்கத்தில் உள்ள ஒருவரின் பதில் என்னவாக இருந்தாலும் அது “இல்லை” என்றே தான் எடுத்துக்கொள்ள பட வேண்டும். அவர் தெளிவு அடையும் வரை காத்திருக்கவும் .
  • தூக்கம் அல்லது மயக்கத்தில் உள்ள ஒருவருக்கு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ அல்லது அதனுடைய விளைவுகளாய் புரிந்து கொள்ளவோ முடியாது. எனவே அவர்களால் சம்மதம் தெரிவிக்க ஏலாது.
  • மற்ற சில விஷயங்களும் ஒருவரின் ஒப்புதல் கொடுக்கும் தன்மையை பாதிக்க கூடும். உதாகரணமாக மன நிலை ஆரோக்கியம் இல்லாதவர்கள் , கற்றல் குறைபாடு உள்ளவர்கள், தலையில் பலத்த காயம் கொண்டவர்கள் . ஒப்புதல் கொடுக்கும் தன்மை என்றால் அந்த நபருக்கு ஒரு முடிவை எடுக்கவும் அந்த முடிவின் விளைவுகளை பற்றி புரிந்து கொள்ளவும் முடியும் . வேற முடிவுகளை தேர்வு செய்யவும் அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரியும் .
  • உங்கள் கூட்டாளருக்கு அவரது ஒப்புதலை எப்போது வேணும் ஆனாலும் திரும்ப பெற உரிமை உள்ளது . அவர் ஒப்புதலை திரும்ப பெற்ற பின் அவருடன் பாலியல் நடைவடிக்கையில் ஈடுபட கூடாது .

ஒருவரிடம் சம்மதம் எப்படி கேற்பது ?

  • பாலியல் நடைவடிக்கையை யார் ஆரம்பிக்கிறாரோ , சம்மதம் வாங்க வேண்டியதும் அவருடைய பொறுப்பே ஆகும் .
  • உங்கள் கூட்டாளர் மயக்கமாகவோ , தூக்கத்திலோ அல்லது குடி போதையிலோ இல்லை என்று உறுதி செய்து கொள்ளுங்கள் . அவர்களால் தனது விருப்பத்தை சொல்ல கூடிய நிலைமையில் தான் இருக்கிறாரா என்று தெரிந்து கொள்ளுங்கள் . அவர் குடித்தோ , மயக்கத்திலோ , தூக்கத்திலோ அல்லது தனது சம்மதத்தை தெரிவிக்க கூடிய நிலைமையில் இல்லை என்றால் அவருடன் பாலியல் நடைவடிக்கையில் ஈடு பட கூடாது .
  • அவர்களிடம் கேட்பதே தான் அவர்களின் சம்மதம் தெரிவதற்கான ஒரு எளிமையான வழி . உங்கள் கூட்டாளரின் உடல் மொழியும் முக பாவங்களையும் கவனிக்கவும்.
  • அவர் சம்மதம் என்று தான் தெரிவிக்கிறாரா என்று உங்களுக்கு உறுதியாக தெரியாத பொது , “இல்லை” என்றே அதை எடுத்து கொள்ள பட வேண்டும்.
  • தெளிவாக உடன்பாடுடன் சொல்லும் சம்மதம் மட்டுமே ஒப்புதலாக எடுத்து கொள்ள படும். அமைதியாக இருப்பதை ஒப்புதல் என்று கருத படாது.