குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகள்

English

நடவடிக்கைகளில் அறிகுறிகள்:

 1. பழைய நினைவுகள்:
  • எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் , உறங்குவதில் சிக்கல் அல்லது கெட்ட கனவுகள் காணுதல்
  • வழக்கமற்ற முறையில் குழந்தை நம்மிடம் இருந்து விலகி இருப்பது அல்லது கவனமற்று இருப்பது.
 2. உணவு மற்றும் உறக்கத்தில் ஒழுக்கமின்மை:
  • உணவு முறையில் திடீர் மாற்றம்
  • உண்ண மறுத்தல்
  • பசியின்மை அல்லது மிக அதிக அளவு பசி
  • விழுங்குவதில் சிரமம்.
  • உறங்குவதில் சிரமம், வழக்கமற்ற நேரத்தில் உறங்குவது,நீண்ட அல்லது குறைந்த நேரம் உறங்குவது
 3. தாக்குதலுக்கு பிறகு வரும் மன உளைச்சல்:
  • திடீரென மாறுபட்ட மனப் பாங்கு: ஆத்திரம்,பயம்,பாதுகாப்பின்மை ,பிறரிடமிருந்து விலகல்
  • பாலியல் பிரச்சினை பற்றி விவாதம் எழும் வகையில்; மறைமுகமாக சில செய்திகளைக் கூறுவது
  • அச்சுறுத்தும் வகையிலான அல்லது பாலியல் தொடர்பான விக்ஷயங்களைக் குறித்து; எழுதுவது, வரைவது,விளையாடுவது அல்லது கனவு காணுவது
  • குறிப்பிட்ட நபர் அல்லது இடம் குறித்து புதிதாக அல்லது பழக்கமற்ற முறையில் பயப்படுவது
  • தன்னை விட மூத்த குழந்தையிடமோ அல்லது பெரியவர்களிடமோ பகிர்ந்து கொண்ட ரகசியம் பற்றி நம்மிடம் பேச மறுப்பது
  • தன்னை விட வயதில் மூத்தவருடன் தான் கொண்டுள்ள நட்பைப் பற்றி பேசுவது
  • காரணமின்றி, திடீரென்று பணம்,விளையாட்டுப் பொருட்கள் அல்லது வேறு பரிசுப் பொருட்கள் வைத்தி்ருப்பது
  • தன்னையும்,தன் உடலையும் வெறுப்பது,அசிங்கமாகவோ அல்லது கெட்டுவிட்டதாக நினைப்பது.
  • பெரியவர்கள் அளவு தனக்கும் பாலியல் பற்றி தெரிவதாக காண்பித்துக் கொள்ளுதல்:
   1. குழந்தை தன் பிறப்பு உறுப்புகளை வெறுப்பது அல்லது தனியாக இருக்க வேண்டும் என்று மிக கடுமையான முறையில் சொல்வது.
   2. அனைத்து உறவுகளையும் பாலியல் ரீதியில் நினைக்க தொடங்கலாம்.
   3. தான் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பதையே வெறுக்க துவங்கலாம்.
   4. குழந்தை தான் பேசும் போது ,பொருத்தமற்ற வார்த்தைகளை பேசுதல் அல்லது தான் சார்ந்த சமூகத்தில் வழக்கமில்லாத முறையில் பேசுவது.
   5. குழந்தை தானே பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவது (மற்ற குழந்தைகளிடம் பாலியல் நடவடிக்கையை தொடங்க ஆரம்பிப்பது.
   6. தன் வயதிற்கு மீறி; பெரியவர்களுக்கான படங்களையோ அல்லது செய்தியையோ பார்ப்பது. அல்லது பெரியவர்களுக்கான ஊடக தளங்களை பார்க்க தேவையற்ற ஆர்வம் காட்டுவது.
  • சில நேரங்களில், குழந்தையிடம் அத்துமீறுபவர்; குழந்தையுடன் வசிப்பிடத்தை பகிர்ந்து கொள்பவராகவோ அல்லது உறவின்றாகவோ இருப்பின், குழந்தை தன் இருப்பிடம் செல்லவே தயக்கம் காட்டுகிறது.
  • சுய மதிப்பை இழப்பது.
  • தட்பவெப்பநிலை கருதாது; பல அடுக்கு ஆடைகளை அணிவது.
  • தன்வயது ஒத்த குழந்தைகளுடன் குறைந்த அளவில் பழகுவது.
  • படிப்பில் பின்தங்குவது.

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் குழந்தையின் உடலில் காணப்படும் அறிகுறிகள்:

பொதுவாக குழந்தையின் உடல் அளவில் எந்தவொரு அறிகுறியும் இருப்பதில்லை. சிலவேளைகளில், குழந்தை கர்ப்பம் அடைவதே அப்பட்டமான எச்சரிக்கை ஆகிறது. என்றாலும், நீங்கள் காணக்கூடிய அறிகுறிகள் சில:

 1. ஆசனவாய், பிறப்பு உறுப்பு அல்லது வாயில் வலி, நிறமாற்றம், இரத்தப்போக்கு அல்லது பிறப்பு உறுப்பில் ஒழுக்கு
 2. சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போது தொடர்ந்து வலி இருப்பது
 3. கழிவறை ஒழுக்கம் உடைய குழந்தை ; திடீரென்று வெளியில் மலம் அல்லது சிறுநீர் கழித்தல்
 4. உட்காருவதற்கோ அல்லது நடப்பதற்கோ சிரமப்படுதல்
 5. அசாதாரண முறையில் தொடர்ந்து காயப்படுவது
 6. அடிக்கடி பூஞ்சை தொற்று வருவது

இளைய குழந்தைகளிடம் காணப்படும் குறிப்பிட்ட அறிகுறிகளைப் பற்றி படிக்க இங்கே. வளர்இளம் பருவத்தினர் வெளிப்படுத்தும் குறிப்பிட்ட அறிகுறிகள் இங்கே.

உங்களால் சிலசமயம் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் நடத்துபவரை அடையாளம் காண முடியும். பாலியல் அத்துமீறல் செய்பவர் வெளிப்படுத்த கூடிய அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்ள இங்கே.

பாதிக்கப்படும் பெரியவர்களிடம் சில சமயம் காணப்படும் அறிகுறிகள் பற்றி படிக்க இங்கே.

நீங்கள் யாருக்காவது பாலியல் வன்முறை நடைபெறுவதாகச் சந்தேகப்பட்டால், தயவுசெய்து ,மௌனமாக இருக்காமல் அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள். நீங்கள் எப்படி உதவ முடியும் என்பது குறித்த சில தகவல்கள் இங்கே