பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட, வயது வந்தவர்களிடம் காணப்படும் அறிகுறிகள்

English

பாலியல் வன்முறை என்பது மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம் ஆகும். பாதிக்கப்பட்டவரை உடல், மன மற்றும் உளவியல் நிலையில் செயலிழக்கச் செய்துவிடும். சில சமயங்களில் , பாலியல் வன்முறையின் பின்விளைவுகள் மிகவும் தாமதமாக வெளிப்படும். சில மாதங்கள், சில வருடங்களுக்குப் பின்னரும் வெளிப்படலாம்.பாதிக்கப்பட்டவர் பொதுவாக ; மன அழுத்தம், தாழ்வுணர்ச்சி, சுயமதிப்பு இழத்தல் ஆகியவற்றை உணர்வர்.இந்த பாதிப்பு உணர்வு, சில சமயங்களில் சிறிது நேரத்திற்கும்,சில சமயங்களில் நீண்ட நேரத்திற்கும் இருக்கும்.

பாதிக்கப்பட்ட பெரியவர்கள் தங்கள் பாதிப்பை வெளிப்படுத்த கீழ்கண்டவாறு செயல்படலாம்:

 1. பழைய நினைகள்:
  • நடந்த சம்பவம் மீண்டும் மீண்டும் நடப்பது போல் கருதி சில சமயத்தில் தன்னிச்சையற்ற முறையில் பயப்படுதல்.
  • குற்ற உணர்வுடனேயே இருத்தல்.
 2. தாக்குதலுக்கு பின் காணப்படும் மன உளைச்சல்:
  • மீண்டும் எப்போதாவது தன்னால் பாதுகாப்பாக உணரமுடியுமா என்ற கவலை உணர்வில் மூழ்கியிருத்தல்.
  • தங்கள் கைவசம் உள்ள வேலையில் கவனம செலுத்த முடியாது சிரமப்படுவர்.
  • Dதாழ்வு உணர்சியையும்,எதிர்மறை எண்ணத்தையும் வளர்த்துக் கொள்வர்.தங்களது உள் அல்லது புறம் களங்கப்பட்டு விட்டதாக எண்ணுவர்.
  • கோபம்
  • மன அழுத்தம்.
  • நெருங்கிய உறவுகளுடன் பழகுவதில் இடையூறு.
  • நெடுநேரத்திற்கு யாருடனும் பேச விரும்பாது இருத்தல்.
  • பாலியல் நாட்டம் இல்லாது இருத்தல்.
 3. சுய தீங்கு:
  • தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது ( வெட்டிக் கொள்வது,எரித்துக் கொள்வது) குறிப்பாக தனியாக இருக்கும் போது.
  • தனிப்பட்ட சுகாதாரத்தில் போதிய கவனம் இல்லாமை.
  • முடியைஇழுப்பது,கீறிக் கொள்வது, தோலை கிள்ளிக் கொள்வது.
 4. உண்ணுதல் மற்றும் உறங்குவதில் ஒழுக்கமின்மை:
  • உணவு பழக்கத்தில் திடீர்மாற்றம்
  • அளவுக்கு அதிகமாக உண்ணுவது அல்லது பட்டினி இருப்பது.
  • உண்ண மறுத்தல்
  • பசியின்மை அல்லது கடுமையான பசி
  • விழுங்குவதில் சிக்கல்.
  • உறக்கத்தில் சிரமப்படுதல், வழக்கத்தை விட குறைந்த அல்லது அதிக நேரம் உறங்குவது,வழக்கமற்ற நேரத்தில் உறங்குவது..
  • அடிக்கடி கெட்ட கனவு காணுவது..
 5. விலகுதல்:
  • வீட்டை விட்டு வெளியேறுதல்
  • நிஜ உலக உண்மைகளை மறக்க செய்யும் புற உடல் அனுபவங்கள்.
  • நனவுலகில் செயல்பட சிரமப்படுதல்.
 6. தற்கொலை: தற்கொலை எண்ணங்கள் அடிக்கடி வருவது.
 7. பொருட்களை தவறான முறையில் பயன்படுத்தல்: மது மற்றும் மருந்துகளை தவறான முறையில் பயன்படுத்தி அதற்கு அடிமையாவது

நீங்கள் யாருக்காவது பாலியல் வன்முறை நடைபெறுவதாகச் சந்தேகப்பட்டால், தயவுசெய்து, மௌனமாக இருக்காமல் அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள். நீங்கள் எப்படி உதவ முடியும் என்பது குறித்த சில தகவல்கள் இங்கே

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் குழந்தைகளிடம் பொதுவாக காணப்படும் சில அறிகுறிகள் இங்கே. இளம்பருவத்தினரிடம் காணப்படும் குறிப்பிட்ட அறிகுறிகள் இங்கே. வளர்இளம் பருவத்தினர் வெளிப்படுத்தும் குறிப்பிட்ட அறிகுறிகள் இங்கே.

உங்களால் சிலசமயம் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் நடத்துபவரை அடையாளம் காண முடியும். பாலியல் அத்துமீறல் செய்பவர் வெளிப்படுத்த கூடிய அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்ள இங்கே.