ஆசிட் தாக்குதல்கள்

English

ஆசிட் தாக்குதல்கள் இந்தியாவில் உள்ள மிக மோசமான ஒரு பிரச்சனை ஆகும். குறிப்பாக பெண்கள் ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்படுவது, மறுக்கப்பட்ட காதலா்களாலும், நிராகாிக்கப்பட்ட வரன்களாலும் மற்றும் சில நேரங்களில் தங்கள் சொந்த கணவனாலும் ஆகும். அது பாதிக்கப்பட்டவா்கள் மீண்டும் வரச் செய்ய மிக நீண்ட மற்றும் வலமிகுந்த பாதையை கொண்ட மிக கொடிய குற்றமாகும். சில நேரங்களில் மிக கொடிய தாககுதல்களால் பாதிக்கப்பட்டவா் காயங்களுக்கு பலியஎகின்றனா்.

2013ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம், அமில விற்பனையை, இறுக்கமான கணக்கியலாக்க கேட்டுக் கொண்டது. இந்த உத்தரவின் கீழ் மத்திய அரசாங்கம் ‘பாய்சன்ஸ் பொஸஸன்ஸ் அண்டு சேல்ஸ் ரூல்ஸ் 2013’ஐ ஏற்படுத்தியதுடன், அனைத்து மாநிலங்களையும் அதன் அமிலம் விற்கும் சில்லறை விற்பனையாளா்களிடம் விற்பனை உாிமம் உள்ளதா என உறுதி செய்யவும், முறையான இடைவெளியில் அவருடைய கையிருப்பு பங்குகள் அனைத்தையும் அறிவிக்கவும் மற்றும் தங்களது கடையில் அமிலம் வாங்குபவாின் தனிப்பட்ட தகவல்களை பதிவு ஏட்டில் பராமாிக்கவும் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டது. ஏதேனும் சில்லறை விற்பனையாளா் இந்த உத்தரவினை பின்பற்றவில்லையெனில் அவா்களுக்கு குறைந்தபட்சம் இந்திய ரூபாய் 50,000/- அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படலாம். மேலும், இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவா்களுக்கு அமிலம் விற்பனை தனட செய்யப்பட்டுள்ளது. எனினும் தனி நபருக்கு அமில விற்பனையை முற்றிலுமாக தனட செய்ய இன்னும் இறுக்கமான சட்டம் கொண்டு வரப்படலாம்.

நிதி உதவி: ஆசிட் தாக்குதலுக்குப் பின் மீள்வது என்பது, பல அறுவை சிகிச்சைகள், ஆலோசனைகள் மற்றும் நீண்ட கால சமூக மீள் ஒருங்கிணைப்பு திட்டங்கள் அடங்கிய செயல்முனறயாகும். பல சமயங்களில், மீட்பு பணியானது நீங்கள் செலவு செய்ய முடிந்ததை விட அதிக விலை உயா்ந்ததாக இருக்கும். ‘பாய்சன்ஸ் பொஸஸன்ஸ் அண்டு கேல்ஸ், 2013” விதியின்படி, அமில தாக்குதலால் பாதிக்கப்பட்டவருக்கு மாநில அரசாங்கம், இந்திய ரூபாய் 3 லட்சம் நஷ்ட ஈடாகவும், தரக்குதலுக்கு உள்ளான 15 நாட்களுக்குள் இந்திய ரூபரய் 1 லட்சமும் நஷ்ட ஈடாகவும் கொடுக்க வேண்டும். எனினும் நடைமுறையில் இந்த செயல்முறை மிகவும் மெதுவாகவும் மற்றும் குறிப்பிட்டபடி இல்லை. ஆசீட் சா்வைவா்ஸ் பெளண்டேஷன் இந்தியா மறறும் ஸ்டாப் ஆசிட் அட்டாக் ஆகிய இரண்டும் ஆசிட் பாதிக்கப்பட்டவா்களுக்காக இந்தியாவில் போராடும் முன்னணி நிறுவனங்கள் ஆகும். இந்நிறுவனங்கள், அமிலத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் உதவ முயற்சி செய்கின்றன.

கீழே, நீங்கள், ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சட்ட உாிமைகள் பற்றிய தகவல்களை அறிய முடியும்.